வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார், குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.