சோழ நாட்டில் கணமங்கலம் என்றவூரில் வேளாளர் குலத்திலே தாயனார் என்பவர் பிறந்தார். மாசில்லாத ஈசன் அன்பர். நாடோறும் இறைவனுக்குச் சம்பா அரிசிச் சோறும், செங்கீரையும் மாவடுவும் நிவேதனஞ் செய்து அமுது செய்வித்து வந்தார்.
துன்பம் வந்த போதும் தங்கள் கொள்கையினின். தவறாதவர்கள் அடியார்கள் என்பதை உலகுக்கு உணர்த்துமாது இறைவன் அவருக்கு வறுமையாகிய இன்னலைத் தந்தருளினார்
வறுமையால் வாடியும் அவர் திருத்தொண்டில் வாட்டமுறவில்லை. பெருஞ் செல்வராய் வாழ்ந்த அவர் இப்போது தாமே கூலியாளாகச் சென்று நெல்லறுத்து, அதனால் வருடி நெல்லை அமுதாக்கி அரனார்க்கு ஊட்டுவாராயினார். கூலியால் வரும் கார் நெல்லைத் தாம் உண்பார்; செந்நெல்லைச் சிவனுக்கு நிவேதிப்பார். எல்லாம் செந்நெல்லாகவே கூலியில் கிடைத்தது அவை முழுவதும் ஈசனார்க்கே ஆக்கினார். பல நாட்கள் பட்டில் கிடந்தார். கீரைகளையுண்டார். சில நாட்கள் நீர்தான் உணவாக நின்றது.
ஒரு நாள் செந்நெல்லரிசி, செங்கீரை, மாவடு இவைகளைக் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார். மாட்சி மிகுந்த மனைவியார் பஞ்சகவ்யம் ஏந்தி அவருடன் சென்றார். செல்லும் வழியில் பசியின் களைப்பினால் வரப்பு தடுக்கித் தாயனார் கீழே விழுந்தார். கூடையில் இருந்த அரிசி, கீரை, மாவடு இவைகள் நில வெடிப்பில் சிந்தின.
"அந்தோ! ஆண்டவனே! உனக்கு நிவேதனம் ஆகாம இவைகள் சிந்திவிட்டன. இனி உயிர் வாழேன்" என்று வாள் எடுத்து கழுத்தை அறுக்கத் தொடங்கினார். நிலவெடிப்பிலிருந்து இறைவன திருக்கரம் வந்து அவரைத் தடுத்தருளியது. மாவடுவைக் கடிக்கும்
ஓசையும் நில வெடிப்பில் கேட்டது.
அரிவாள் கொண்டு தன் கழுத்தை அரிந்ததால் அரிவாட்டாய என்று பேர் பெற்றார். சிவபெருமான் காட்சி தந்து சிவபதம் அருளினார்.


Comments
Post a Comment