அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.
வாழ்க்கைப் புராணம்
அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.மேலும் அவர்பால் கொண்ட பற்றினால் தனது மூன்று குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு நடு திருநாவுக்கரசு மற்றும் இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்று அவரில்லம் சென்றார் திருநாவுக்கரசர்.
அப்பூதியடிகளை சந்தித்த திருநாவுக்கரசர் தான் திருநாவுக்கரசர் என்று சொல்லாமல் ஏன் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் செய்கின்றீர்கள் என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும் எடுத்துரைத்தார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் உணவு உண்ண அழைத்தார்.ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசர் உணவு தயாராவதற்குள் திருக்கோயில் சென்று வருவதாக புறப்பட்டார்.
தாய் தந்தையார் ஏவ மூத்த திருநாவுக்கரக எனக்கு இப்பணி கிட்டியதே என்று மனமகிழ்ச்சியுடன் சென்று வாழையிலை கொய்தான். அரவந் தீண்டியது. விரைந்து வந்து இலையைப் பெற்றோர் முன் வைத்து மாண்டான், மாண்ட மகனைப் பாயினால் மறைந்துப் புறங்கட்டில் வைத்து, முகமலர்ந்து . அப்பர் பெருமானை வரவேற்று அமுது படைத்தார்கள். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்துவர கோரிக்கை வைத்தார். அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார்.அவர் அன்பின் திறத்தைக் கண்டு வியந்தார். 'ஒன்றுகொலாம்' என்ற திருப்பதிகம் பாடி மகனை எழுப்பினார்.
குரு பூசை
அப்பூதியடிகள் நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment