இயற்பகையார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது.
சோழவள நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் அவதரித்தவர். உலக இயலுக்குப் பகையானவர். அதனால் இயற்பகையார். அருளின் இயலை ஒருபோதும் பகையாதவர், பெருஞ் செல்லம் படைத்தவர். சிவனடியார் விரும்பிக் கேட்கும் எதனையும் இல்லை என்னாது வழங்கும் இயல்பினையுடையவர்.
இவருடைய என்னல் தன்மையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் தூர்த்த வேதிய அடியார் கோலத்துடன் வந்தார். இயற்பகையார் அவரை வரவேற்று வந்தனை வழிபாடு செய்தார். வந்த அடியார் "மன்னு காதலுன் மனைவியை வேண்டி வந்தனம்" என்றார். இயற்பகையார் உள்ளம் உவந்து, "என்பால் உள்ளதனையே கேட்டருளினீர்” என்று கூறி மனைவியாரை வழங்கினார், "உறவினர் தடுப்பார்கள்; நீ துணையாக வருக" என்றார் அடியார்.
இயற்பகையார் வாள் தாங்கி உடன் சென்றார். தடுத்த உறவினர்களைக் கொன்று
குவித்தார். திருச்சாய்க்காட்டின் அருகில் இனி நீ போகலாம்" என்றார் இறைவர்.
இயற்பகையார் இறைஞ்சி மனமகிழ்ந்து திரும்பினார். பொய்யிலா உள்ளத்தன்;
திரும்பிக்கூடப் பார்க்காமல் போகின்றான்" என்று மகிழ்ந்தார் இறைவர்.
இயற்பகை நாயனாரை ஓலம் இட்டு அழைத்தருளினார்.
"இயற்பகை முனிவா ஓலம்! ஈண்டுநீ வருவாய் ஓலம்!
அயர்ப்பிலா தானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்
மயக்கறு மறைஒலிட்டு மாலயன் தேடநின்றான்."
இயற்பகையார் விரைந்து ஓடினார். அங்கே அருந்தவர் இல்லை. பெருந்திரு மனைவியார் இருந்தார். வந்தவர் எங்கே? என்று திகைத்தார்.

Comments
Post a Comment