அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்- திருத்தொண்டர்புராணம்
சோழ நாட்டில், திருமங்கலம் என்ற தலத்தில் இடையர் குலத்தில் தோன்றினார் ஆனாயர். இளமையிலிருந்தே திருநீற்று அன்பினில் சிறந்து விளங்கினார். திருஐந்தெழுத்தையும் இடையறாது ஓதுவார்.பசுக்குலங்களை மேய்த்துப் பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.பசுக்குலங்கள் அவர் அன்பினால் நன்கு பெருகின
ஒரு கார்த்திகை மாதம் அஸ்த நன்னாளில் பசுக் கூட்டங்களை ஓட்டி கொண்டு ஒரு கொன்றை மரத்தின் கீழே சென்றார். கொன்றை மலர் அவருடைய சிவபக்தியை மிகுவித்தது பல்லாக்குழலை யெடுத்து ஐந்தெழுந்தை அதில் இணைத்து வாசித்தார். அந்த நாத வெள்ளம் விண்ணும் மண்ணும் ஓடிநிறைந்தது. சராசரங்கள் யாவும் இரைவயப்பட்டு உருகின.
பாம்பும் மயிலும் சேர்ந்து விளையாடின. விண்ணவர் விமானங்களில் வந்து கேட்டு உருகினார்கள்.
" நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றாய் நயத்தலினால்
மலிவாய்வெள் ளெயிற்றரவம் மயில்மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடங்கரியும் உடன் சாரும்
புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல் வாயும். "
இசைப்பிரியராகிய சிவபெருமான் சிவகாமியுடன் காட்சி தந்தார். "இந்நிலையே நம் சிவலோகம் வருக" என்று அருள்புரிந்தார்.
ஆனாயர் அரனுலகம் புகுந்தார்.
Comments
Post a Comment