Skip to main content

உருத்திர பசுபதி நாயனார்

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை
 

 
சோழவள நாட்டில், திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் உருத்திரபசுபதியார்.
 
 
 
 
 
 
 

 
இவர் சதா கழுத்தளவு நீரில் நின்று உச்சிமேற் கரங்கூப்பிக் கொண்டு, ஸ்ரீ ருத்ரம் என்ற மந்திரத்தை ஓதி சிவபெருமானைத்துதித்துக் கொண்டிருந்தார். இதனாலயே உருத்திர பசுபதி என்ற பெயரும் பெற்றார். ஆரும் பெறாத பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றார். 


குரு பூசை

உருத்திர பசுபதிநாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.




Comments

Popular posts from this blog

எறிபத்த நாயனார்

  இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை                           கொங்கு நாட்டுத்தலங்கள் ஏழு. அவற்றுள் ஒன்று கருவூர், அத்தலத்தில் ஆனிலை யென்ற கோயிலில் பசுபதி ஈச்சுரர் எழுந்தருளியிருப்பார். அந்நகரைப் புகழ்ச்சோழர் என்ற ஆற்றல் படைத்த மன்னர் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்தார்.                     அத் தலத்தில் எறிபத்தர் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர்திருக்கரத்தில் பரசு என்ற படைக்கலம் ஏந்தியவர். அடியார்க்கு எங்காவது தீங்கு நேர்ந்தால் அவர் தமது பரசினால் தீமையைத் தடுத்து நலம் புரிவார்.                     அன்று அஷ்டமி. மறுநாள் மகாநவமி. சிவகாமியாண்டார் என்னும் அடியார் நந்தவனத்தில் மலர் பறித்துப் பூக்கூடையைத் தண்டில் தொங்க விட்டுத் திருக்கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.                     புகழ்ச்சோழருடைய பட்டவர்த...

இடங்கழி நாயனார்.

வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார்,   குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.    

கடமையை நிறைவேற்ற தவறிய கண்ணன்

 பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும் போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.  தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.  அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.   தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன்.  மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவ...