பெயர்: 1 ) அதிபத்தர் குலம்: பரதவர் நாடு: சோழ நாடு பூசை நாள்: ஆவணி ஆயில்யம் வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார். பெயர்: 2) அப்பூதியடிகள் குலம்: அந்தணர் நாடு: சோழ நாடு பூசை நாள்: தை சதயம் திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர். பெயர்: 3 ) அமர்நீதி நாயனார் குலம்: வணிகர் நாடு: சோழ நாடு பூசை நாள்: ஆனி பூரம் சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர். பெயர்: 4 ) அரிவட்டாயர் குலம்: வேளாளர் நாடு: சோழ நாடு பூசை நாள்: தை திருவாதிரை சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர். பெயர்: 5) ஆனாய நாயனார் குலம்: இடையர் நாடு: மழநாடு பூ...